Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தி சினிமாவை அலறவிட்ட தமிழ்ராக்கர்ஸ் – இரண்டே நாளில் வெளியானது சேக்ரட் கேம்ஸ் !

Advertiesment
இந்தி சினிமாவை அலறவிட்ட தமிழ்ராக்கர்ஸ் – இரண்டே நாளில் வெளியானது சேக்ரட் கேம்ஸ் !
, சனி, 17 ஆகஸ்ட் 2019 (10:05 IST)
தமிழ் சினிமாவை இவ்வளவுக் காலம் அச்சுறுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் இப்போது இந்தி சினிமாவையும் அலறவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்துப் படங்களையும் வெளியாகும் அன்றே தியேட்டர் பிரிண்டாகவும் ஒரு வாரத்துக்குள்ளே நல்ல பிரிண்ட்டும் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம். சமீபகாலமாக தமிழ் படங்கள் தாண்டி மலையாளம், கன்னடம், வெப் சீரிஸ்கள் போன்றவற்றையும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தில் வெளியானது சேக்ரட் கேம்ஸீன் இரண்டாவது சீசன். இதன் முதல் சீசன் கடந்த ஆண்டு வெளியாகி பரவலானக் கவனததைப் பெற்றது. இந்த சீசனின் அனைத்து எபிசோட்களையும் வெளியாகி இரண்டே நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மோடி கலந்துகொண்ட மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியையும் இதுபோல வெளியிட்டது அதிர்ச்சியளித்தது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொடரை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளதால் இதன் பார்வையாளர்கள் குறைய வாய்ப்புள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"என் முன்னாடியே இதெல்லாம் செய்தாங்க" - கவின், லொஸ்லியா பற்றி பேசிய சாக்ஷி!