Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"என் முன்னாடியே இதெல்லாம் செய்தாங்க" - கவின், லொஸ்லியா பற்றி பேசிய சாக்ஷி!

Advertiesment
, சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருங்கி பழகி காதல் டிராமாவை அரங்கேற்றி வந்ததாலும் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியார்களை பற்றி புறம் பேசியதாலும் மக்களின் அதிக வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி. இதனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 


 
பிக்பாஸில் வெளியயேற்றப்படும் போட்டியாளர்களை வளைத்து பிடித்து மீடியாக்கள் பேட்டியெடுத்து வீட்டிற்குள் நடந்தவற்றையெல்லாம் போட்டு வாங்கிடுவார்கள். அந்தவகையில் கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய சாக்ஷியை பிரபல இணையதள சேனல் ஒன்று பேட்டியெடுத்திருந்தது. அதில் பேசிய சாக்ஷி கவின் மற்றும் லொஸ்லியாவின் உறவு பற்றியும் அவர்கள் வீட்டிற்கும் நடந்துகொண்டவைகளை குறித்தும் பேசியுள்ளார். 
 
அதாவது, நான் லொஸ்லியாவிடம் கவின் பற்றி கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறினால். அதே போல கவினிடம் கேட்ட போதும் நான் லொஸ்லியாவிடம் நண்பனாக தான் பழகுகிறேன் நீ தான் மச்சா எனக்கு முக்கியம் என்று என்னிடமும் சொன்னார். ஆனால், அதன் பிறகு என் முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் நெறய விஷயம் செய்தார்கள். 

webdunia

 
இதை பார்த்து நான் மிகவும் விரக்தி அடைந்து கவினிடம் சண்டையிட்டேன். இதனால் கொஞ்சம் நாட்கள் லொஸ்லியாவிடம் பேசாமல் இருந்தேன். லொஸ்லியாவின் உண்மை முகம் என்ன என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.  வனிதா சமீபத்தில் சொன்னது போல அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை  என சாக்ஷி கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலி, ஐஸ்வர்யா தத்தா உள்பட 5 நாயகிகள் நடிக்கும் படம்!