பிங்க் தெலுங்கு ரீமேக்: பவன் கல்யாணின் ஸ்வாக் லுக்... "வக்கீல் சாப்" பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

திங்கள், 2 மார்ச் 2020 (17:57 IST)
பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் வெளியானதை அடுத்து இப்போது தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. 
 
சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது பிங்க் திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் அதிக அளவில் கிடைத்தது.
 
இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். நிச்சயம் இப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜூட இணைந்து தயாரிக்கிறார். 
தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிக்கிறார்.  இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

We love to have you back in the cinemas Power Star @PawanKalyan garu loved the first look of #VakeelSaab. My best wishes to whole team of the film.#VakeelSaabFirstLook#PSPK26FirstLook pic.twitter.com/ltz5IGlko0

— Sunil (@Mee_Sunil) March 2, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பெண்களே இல்லாத ’பன்றிக்கு நன்றி சொல்லி’ … ஒன்லி ஆண்கள் – ஏன் இப்படி ?