Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோடியின் இரண்டாவது திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்கள்

நரேந்திர மோடியின் இரண்டாவது திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்கள்

Arun Prasath

, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:28 IST)
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை குறித்த மற்றுமொரு திரைப்படமான மன் பைரகி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து கடந்த மே மாதம் “ நரேந்திர மோடி” என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களை சென்றடையவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து இரண்டாவதாக தயாராகவுள்ள ”மன் பைராகி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படம் மோடியின் இளம் வயது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைகளை குறித்து சொல்கிறது என இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் வாழ்க்கையிலிருந்து சொல்லப்படாத ஒரு கதையாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார் சஞ்சய் திரிபாதி.

பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது “மன் பைரகி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். ”மன் பைரகி” என்பதற்கு உலகின் மீது பற்றற்ற மனிதர் என்று அர்த்தமாம்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாஜ்மஹாலில் காஜல் அகர்வால் - சூப்பர் கியூட் புகைப்படங்கள்!