Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”நான் தமிழர்களை பற்றி அப்படி கூறவேயில்லை”.. அந்தர் பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Advertiesment
”நான் தமிழர்களை பற்றி அப்படி கூறவேயில்லை”.. அந்தர் பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Arun Prasath

, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:20 IST)
நான் தமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்று கூறவேயில்லை, அரசியல்வாதிகளை தான் அவ்வாறு கூறினேன் என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மோடி சமஸ்கிரதத்தை விட தமிழ் தான் பழமையான மொழி என கூறியதை தமிழர்கள் யாரும் கொண்டாடவில்லை என்ற காரணத்தால் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழர்கள் நன்றி கெட்டவர்கள்” என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது இதனை பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

அதாவது, தமிழ்மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளையே அவ்வாறு கூறியதாகவும், ஒட்டு மொத்த தமிழர்களையும் தான் அவ்வாறு கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொன்.ராதகிருஷ்ணனின் இந்த மறுப்பு குறித்து சர்ச்சையிலிருந்து தப்பிப்பதற்கே இவ்வாறு கூறுகிறார் என்றுபலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்களை நன்றிகெட்டவர்கள் என்று கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக, அமமுக இணப்பு – டிடிவி தினகரன் பதில் !