Publish Date: Mon, 30 Nov 2020 (08:46 IST)
Updated Date: Mon, 30 Nov 2020 (08:51 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.
தற்ப்போது அத்ரங்கி ரே , கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆனந்த் எல் ராய் இயக்கம் அத்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. மீண்டும் ஷூட்டிங்கை துவங்கியுள்ள படக்குழு டெல்லியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை நடத்தி வருகின்றனர் .
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்ப்போது நடிகர் தனுஷ் படத்தின் கதாநாயகி சாரா அலிகானுடன் இணைந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.