Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் "அத்ரங்கி ரே" படத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்ட அக்ஷய் குமார்!

Advertiesment
தனுஷின்
, திங்கள், 21 டிசம்பர் 2020 (16:05 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.
 
தற்போது அத்ரங்கி ரே , கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆனந்த் எல் ராய் இயக்கம் அத்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. மீண்டும் ஷூட்டிங்கை துவங்கியுள்ள படக்குழு மதுரை, டெல்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் படப்பிடினை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லியில் உள்ள ஆக்ராவில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலில்  ஷாஜகான் கெட்டப்பில் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சு மெத்தை போல் இருக்கு... இடுப்பு கிளாமரில் கிக்கு ஏத்தும் சாக்ஷி!