Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை பார்வதியின் திடீர் முடிவு

Advertiesment
நடிகை பார்வதியின் திடீர் முடிவு
, வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:59 IST)
நடிகை பார்வதி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக திடீரென அறிவித்துள்ளார்.
நடிகை பார்வதி  பூ, மரியான் ஆகிய படங்கள் மூலம்  தமிழில் பிரபலமானவர்.    கேரளாவைச் சேர்ந்த இவர், அங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றியும் பேசி வந்தார். மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் பார்வதி முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடிவு செய்ததை கடுமையாக கண்டித்தார்.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக திடீரென்று அறிவித்து உள்ளார். இதுகுறித்து பார்வதி கூறியிருப்பதாவது:–
webdunia
‘‘இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும் எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். அன்பாக இருங்கள்’’
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி!