Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பை 2019 : விராட் கோலி 'பௌண்டரி எல்லை' குறித்து விமர்சனம் - விதிகள் சொல்வது என்ன?

Advertiesment
உலகக் கோப்பை 2019 : விராட் கோலி 'பௌண்டரி எல்லை' குறித்து விமர்சனம் - விதிகள் சொல்வது என்ன?
, திங்கள், 1 ஜூலை 2019 (21:42 IST)
இந்திய அணித்தலைவர் விராட் கோலி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இருந்த ஆட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றி மூலமாக இங்கிலாந்து அரைஇறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்தது. அதே சமயம் இந்தியா இன்னும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.
 
ஜானி பேர்ஸ்டோ - ஜேசன் ராய் இணையின் வழிகாட்டலோடு 13 சிக்ஸர்கள் உதவியுடன் 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. இந்தியாவால் சேஸிங்கில் வெற்றி பெறமுடியவில்லை.
 
''டாஸ் மிக முக்கிய பங்காற்றியது. குறிப்பாக மிகக்குறைவான தூரத்தில் ஒரு பக்கம் பௌண்டரி எல்லை இருந்த நிலையில் டாஸ் இப்போட்டியில் முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு விநோதமான தட்டையான பிட்ச் '' என கோலி போட்டி முடிந்தபிறகு கூறினார்.
 
பேர்ஸ்டோ சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த ரன்கள் 111. ஆறு சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார். ஆனால் விராட் கோலி பெர்மிங்காம் மைதானத்தின் சீரற்ற பகுதிகள் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
 
''59 மீட்டர் கொண்ட பௌண்டரி எல்லை மீது ஒரு பேட்ஸ்மேன் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து சிக்ஸர் விளாச முடியுமெனில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' என அவர் கூறினார்.
 
''மைதானத்தில் ஒரு பக்கம் 82 மீட்டர் கொண்ட பௌண்டரி எல்லை இருந்தது. அவர்கள் தங்களது பந்துவீச்சில் எந்த லைனில் வீசவேண்டும் என்பதில் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டனர். ஆனால் ஒரு பக்கம் குறைவான பௌண்டரி எல்லையை வைத்துக்கொண்டு உங்களால் பெரிதாக எதையும் செய்ய முடியாது'' எனக் கூறினார் கோலி.
 
1. டாஸ் போடுவதற்கு முன்பு நடுவர் அந்த ஆட்டத்துக்கான பௌண்டரி எல்லையை தீர்மானிப்பார். அந்த பௌண்டரி எல்லைதான் அந்த ஆட்டம் முடியும் வரை கடைபிடிக்கப்படும்.
 
2. இதன் நோக்கம், ஒவ்வொரு மைதானத்திலும் ஆடுகள பகுதியின் அளவை அதிகரிப்பதே.
 
3. 90 யார்டுகளுக்கு மேல் ஒரு பௌண்டரி எல்லை இருக்கக்கூடாது. அதாவது 82.29 மீட்டரை விட நீளமான பௌண்டரி எல்லை நிர்ணயிக்கக் கூடாது.
 
4. 65 யார்டுகளுக்கு குறைவாகவும் ஒரு பௌண்டரி எல்லை அமையக்கூடாது. அதாவது 22 யார்டு பிட்ச் அமைந்திருக்கும் களத்தின் மையப்பகுதியில் இருந்து 59.43 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் பௌண்டரி எல்லை அமையக்கூடாது.
 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசுகையில், பிட்ச் குறித்த விவரங்கள் அனைத்தும் போட்டி நடைபெறும் நாள்களுக்கு குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது'' எனத் தெரிவித்தார்.
 

 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்