Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று இலங்கை காட்டில் ரன் மழை – குடை பிடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்

இன்று இலங்கை காட்டில் ரன் மழை – குடை பிடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்
, திங்கள், 1 ஜூலை 2019 (17:20 IST)
நடைபெற்றுவரும் உலக கோப்பை போட்டியில் இன்று இலங்கைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது. வழக்கம்போல பந்துவீச்சை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் இலங்கையை மடக்க முடியாமல் திணறி வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதால் முதலில் முடிந்தளவு எதிரணியின் ரன் பலத்தை குறைத்து விட்டு பிறகு களம் இறங்குவதே வெஸ்ட் இண்டீஸின் பழக்கம். இலங்கையையும் அவ்வாறே எதிர்கொள்ள தொடங்கியது. ஆனால் இந்த முறை அவர்கள் வியூகம் தப்பாய் போய்விட்டது.

எப்படியாவது பாகிஸ்தானுக்கு சரிக்கு சமமாக வரவேண்டும் என நினைத்ததோ என்னவோ, அடித்து விளாசி வருகிறது இலங்கை. இங்கிலாந்தை வென்ற போது ஏதாவது அதிர்ஷ்டத்தால் வென்றிருப்பார்கள் என்று கூட சொன்னார்கள். இன்று இலங்கை விளையாடுவதை பார்க்கும்போது பக்குவமடைந்திருப்பது தெரிகிறது.

கருணரத்னே நிறைய பந்துகளை வீணடித்து 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் பெரேரா நிதனமாக விளையாடி 8 பவுண்டரிகள் கொடுத்து ஒரு அரை சதத்தை வீழ்த்தியபின் ஆட்டமிழந்தார். 28 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் 168 ரன்கள் பெற்றிருக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் 270க்கு குறையாமல் ரன்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

270+ இலக்கு என்பது சில சமயங்களில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் இலக்குதான் என்றாலும் மலிங்கா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து வெற்றிபெறுவது வெஸ்ட் இண்டீஸுக்கு சவாலான விஷயமே!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம்: மதில் மேல் பூனையாய் இலங்கை