Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்

ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்
, திங்கள், 1 ஜூலை 2019 (21:34 IST)
பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நீட்சியில் இது சமீபத்திய சம்பவமாக அமைந்துள்ளது.
 
 
ஹாங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அதை மற்ற போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்து பார்வையிட்டனர்.
 
நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதுடன், வெளியே சூழ்ந்திருக்கும் போராட்டக்காரர்களை நோக்கி கைகளை அசைத்தனர்.
 
ஹாங்காங் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மார்ச் மாதத்திலிருந்து அமைதி வழியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வடிவம், தற்போது முதல் முறையாக திசைமாறியுள்ளது.
 
நாடாளுமன்ற அவையின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கைது செய்யப்படுவார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகளை காவல்துறையினர் விடுத்தனர். இருப்பினும், கட்டடத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.
 
ஹாங்காங்கின் நாடாளுமன்ற அவைக்குள் நுழையும் போராட்டக்காரர்களின் முயற்சியின் துவக்கத்தில் மிளகாய் பொடி தூவியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க நினைத்த காவல்துறையினர், பிற்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
1997ஆம் ஆண்டு இதே நாளில் ஹாங்காங் நகரம், பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுகவின் அடுத்த விக்கெட்: இசக்கி சுப்பையா செய்தியாளர் சந்திப்பு