Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது?

யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது?
, புதன், 30 மார்ச் 2022 (16:04 IST)
ரஷ்யா மீதான யுக்ரேன் படையெடுப்பால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. 

 
இதனால் ரஷ்யா புதிய வணிக வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியா மலிவு விலையில் எண்ணையை வாங்குகிறது. இது குறித்து அமெரிக்கா இந்த எண்ணெய் இறக்குமதி சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றாலும், ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகும். இதன் விளைவு அழிவினையே ஏற்படுத்தும் என தெரிவித்த்துள்ளது.
 
இந்தியா எங்கிருந்து எண்ணெயைப் பெறுகிறது?
 
அமெரிக்கா, மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்குத் தேவையான 80 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யயப்படுகிறது.
 
2021ல் இந்தியா 12 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணையை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. இது மொத்த இறக்குமதியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே ஆகும். பெருவாரியான இறக்குமதி கடந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் அமெரிக்கா மற்றும் நைஜீரியாவிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.
 
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை. ஆனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஒப்பந்தம் 6 மில்லியன் பீப்பாய் அளவை எட்டியுள்ளது என கெப்லர் எனும் பண்ட ஆராய்ச்சி நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
 
மேலும் அதிக அளவு எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தாலும், அது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சிறு துளிக்கு சமம் என தெரிவித்துள்ளது இந்தியா.
 
இந்தியா என்ன ஒப்பந்தங்களைப் பெறுகிறது?
 
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பை தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் இதை வாங்குவதற்கு சந்தையில் போட்டி நிலவுகிறது. சரியாக இந்தியா என்ன விலை செலுத்துகிறது என்பதை அறிய இயலாவிட்டாலும் ப்ரெண்ட் கச்சா எண்ணைய் விலையில் யூரல்ஸ் விலைத் தள்ளுபடி கடந்த வாரம் பீப்பாய் ஒன்றுக்கு 30 டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என கெப்லரின் ஆராய்ச்சியாளர் ஸ்மித் கூறுகிறார்.
 
பொதுவாக இந்த இரு வித கச்சா எண்ணெயும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் மார்ச் மாதத்தில் ஒரு கட்டத்தில் யூரல்ஸின் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. இவ்விரண்டு கச்சா எண்ணெய்களுக்கு இடையேயான விலை வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது இதுவே முதல் முறை .
 
எனவே இந்தியாவும் சீனாவும் இந்த வாய்பை பயன்படுத்தி குறைந்த அளவாவது ரஷ்ய கச்சா எண்ணையை அதிகபட்ச தள்ளுபடி விலையில் பெற வாய்ப்பு உள்ளது என மேலும் அவர் கூறினார்.
 
ரஷ்யா மீதான பொருளாதார தடையின் விளைவுகள் என்ன ?
 
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் தள்ளுபடி விலையில் வணிகம் நடத்திய போதும் ரஷ்ய வங்கிகள் மீதான தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது ரஷ்யாவுடன் ஏற்றுமதி - இறக்குமதி என இருவகை வணிகத்தில் ஈடுபட்டவர்களையும் பாதித்துள்ளது.
 
ப்ளூம்பெர்க் நிதி ஆராய்ச்சியாளர்கள், இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்பொழுது ரஷ்யாவிடம் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கான விலையை ஏறக்குறைய 500 மில்லியன் டாலர் வரை பெறுவதற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இந்தியாவிற்கு ஒரு மாற்று வழி உள்ளது. டாலர் மூலம் வணிகம் மேற்கொள்வதை விட தங்கள் சொந்த பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்ளலாம். அதாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் டாலருக்குப் பதிலாக ரூபில்ஸ் (ரஷ்ய நாணயம் ) பெற்றுக் கொள்வார்கள்.
 
இந்தியா எங்கு எண்ணெய் வாங்க முயற்சிக்கிறது ?
 
அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அளவு பிப்ரவரியில் இருந்து குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்துள்ளது. என ரெஃபினிட்டிவ் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது எதிர்காலத்தில் இப்படி நீடிக்காது என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம்,
 
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு தனது சொந்த சப்ளையைப் பயன்படுத்த நினைக்கிறது அமெரிக்கா.
 
பண்ட மாற்று முறையில் இரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் ஏற்பாடு, அமெரிக்கா இரான் மீது மீண்டும் தடை விதித்தபோது நின்றுபோனது. இப்போது மீண்டும் இந்த நடைமுறை தொடங்கும் என்று தெரிகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இரானிடம் இருந்தும் எண்ணெய் வாங்கலாம்.
 
ஆனால், இரானின் அணுக்கரு திட்டம் தொடர்பாக நடக்கும் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் விரிவான ஒப்பந்தம் எட்டப்பட்டால் ஒழிய இந்த பண்ட மாற்று ஏற்பாடு மீண்டும் தொடங்கும் சாத்தியம் குறைவு.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்டங்களால் தொடரும் தற்கொலைகள்! – தடை செய்ய ஓபிஎஸ் கோரிக்கை!