Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த படிப்புகளுக்கு கணிதம் தேவையில்ல..! – பொறியியல் படிப்புகளில் மாற்றம்!

Advertiesment
இந்த படிப்புகளுக்கு கணிதம் தேவையில்ல..! – பொறியியல் படிப்புகளில் மாற்றம்!
, புதன், 30 மார்ச் 2022 (09:59 IST)
இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட படிப்புகளில் சேர தேவையான தகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு பொறியியல் படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். 12ம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் 12ம் வகுப்பில் குறிப்பிட்ட சில பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது.

இந்த நிபந்தனைகளில் தற்போது ஏஐசிடிஇ மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. முன்னதாக வேளாண் பொறியியல், தோல் பதனிடுதல், உணவு பதப்படுத்தல் போன்ற பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் கணிதம் படித்திருப்பது அவசியம் என்ற விதிமுறை இருந்த நிலையில் தற்போது இந்த படிப்புகளுக்கு கணிதம் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல CSE, EEE, ECE போன்ற படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1,200 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள்; 31 பலி! – இந்தியாவில் கொரோனா!