Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாசப்பட விவகாரம்: காசி காவல்துறை விசாரணையில் என்ன சொன்னார்?

ஆபாசப்பட விவகாரம்: காசி காவல்துறை விசாரணையில் என்ன சொன்னார்?
, புதன், 27 மே 2020 (22:55 IST)

பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசி ஆறு நாள் போலிஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

காசியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் காசி மீதான புகார்கள் என்ன?

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி, இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், பொறியியல் பட்டதாரி, மாணவி உள்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் காசி மீது, போக்சோ, கந்து வட்டி, பாலியல் வன்கொடுமை என பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு நாட்கள் போலீஸ் காவல் முடிந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

காசியிடம் நடத்தப்பட்ட ஆறு நாள் விசாரணை குறித்து போலிசார் ஒருவர் கூறும் போது, "முதற்கட்டமாக நாகர்கோவில் கூடுதல் மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின் இரண்டாம் கட்டமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காசியிடம் விசாரணை நடத்தப்பட்டது," என்றார்.முதற்கட்ட விசாரணையில் போதுமான தகவல்கள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. பின்னர் இரண்டாம் கட்ட விசாரணையில் காவல்துறையால் காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், பென்டிரைவ் மற்றும் லேப்டாப்களில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களில் உள்ள பெண்கள் குறித்து காசியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், விசாரணையின் போது முதல் இரண்டு நாட்கள் காசியிடம் இருந்து எந்த தகவல்களையும் பெற முடியவில்லை.


மூன்றாவது நாள் விசாரணையின் தொடக்கத்தில் 'அனைத்து குற்றங்களையும் நான்தான் செய்தேன். நான் இந்த தவறுகளை தெரியாமல் செய்து விட்டேன், காவல் துறை இப்படி விசாரணை செய்து கண்டு பிடிக்கும் என எனக்கு தெரியாது' என காசி பேச தொடங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


புகார் அளித்த பெண்களை எப்படி தெரியும், எத்தனை நாட்கள் பழக்கம் என்பது குறித்து கேட்டபோது "என்னிடம் பல பெண்கள் பழகி உள்ளனர் அதில் இவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரையும் நான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றவில்லை. அதேபோல் நானாக யாரையும் சென்று ஏமாற்றவில்லை. என் அழகை பார்த்து வந்த பெண்களிடம் நான் உல்லாசமாக இருந்தேன். என்னுடைய பண தேவைக்காக சில பெண்களின் நட்பை பயன்படுத்திக் கொண்டேன்," என காசி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"போக்சோ வழக்கில் புகார் அளித்த மாணவியை காசி கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அழைத்து சென்றதாக வாக்கு மூலம் அளித்ததன் அடிப்படையில் அந்த இடங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினோம்," என்றார்.

காசியின் நண்பரின் உறவினர் ஒருவர் நாகர்கோவிலில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார். அங்கு உள்ள பெண் மருத்துவர் ஒருவருடன் காசிக்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக காசி அடிக்கடி அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் மருத்துவர் காசியிடம் விந்து தானம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

பின்னர் காசி அடிக்கடி அந்த மையத்தில் விந்து தானம் செய்து வந்துள்ளார். அந்த மையத்தின உரிமையாளர் மற்றும் பெண் மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், காசியுடன் தொடர்பில் இருந்த பல பெண்கள் வெளி மாவட்டங்களில் உள்ளதால் அவர்களிடம தொலைபேசியில் தொடர்பு கொண்டு காசி குறித்து விசாரனை நடத்தியுள்ளோம், அதில் சில பெண்கள் இல்லத்தரசிகள் என்பதால் காசி குறித்து புகார் அளிக்க மறுத்து விட்டனர், என்றார்.

காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பிபிசி தமிழிடம் கூறுகையில் "காசி வழக்கில் காவல்துறை மிகவும் நேர்மையாக விசாரனை நடத்தி முடித்துள்ளது.குற்றவாளி காசியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவர் மீது அளிக்கப்பட்ட வழக்கு ஒன்று போக்சோ என்பதால் என்னால் அது குறித்து விரிவாக பேச முடியாது," என்றார்.

வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்

"இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி தரப்பில் காவல்துறையின் விசாரணை ஆவணங்கள் கேட்கப்பட்டதால் ஆவணங்களை சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை தொடங்குவது குறித்து சிபிசிஐடிதான் முடிவு செய்ய வேண்டும்."

"காவல்துறை நடத்திய விசாரணையில் காசிக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களாகவே வந்து புகார் அளிக்கலாம், புகார் அளிக்கும் பெண்கள் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்படும்," என்றார் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.

 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி பிரசாத லட்டு... ஆன்லைனில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம் ! பாதி விலை குறைப்பு