வைகாசி விசாக விரத வழிபாட்டு முறைகள்...!!

மக்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று வழிபாடு மேற்கொண்டு விரதத்தைத் தொடங்குகின்றனர்.

பின் பகல் முழுவதும் உணவருந்தாமலோ அல்லது பால், பழத்தினை உண்டோ சஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்ற  பாடல்களைப் பாடியும், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை உச்சரித்தும் வருகின்றனர்.
 
மீண்டும் மாலையில் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம், தயிர் அன்னம், அப்பம் ஆகியவற்றைப் படைக்கின்றனர். செவ்வரளி, நாகலிங்கப்பூ, செந்தாமரை, மல்லிகை முதலிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.
 
இந்நாளில் குடை, செருப்பு, நீர்மோர், பானகம், தயிர் அன்னம் ஆகியவை தானமாக வழங்கப்படுகின்றன. மலைக் கோவில்களில் மலையைச் சுற்றிலும் கிரிவலம்  மேற்கொள்ளப்படுகிறது.
 
இவ்விரத்தினை மேற்கொள்ளவதால் குழந்தைப்பேறு கிட்டும். நல்ல மணவாழ்க்கை அமையும். நோயில்லா நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கிருஷ்ணரை பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்கள்...!!