சிவப்பு நிறத்திலான உருகிய பாறை குழம்பு நீரில் கலப்பதற்கு முன்னர் டெல்டா பகுதியாக உருவானது. 250மீட்டர் தூரத்திலிருந்து பாறைகள் விழுந்ததால் நெருப்பு புகை மண்டலம் உருவாகியது.
எரிமலை குழம்பு கடலில் விழுந்தால் அந்த காட்சி பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருக்கலாம் ஆனால் அது அதிகம் விஷமாக மாறலாம்.
அந்த புகை விஷத்தன்மை வாய்ந்தது. இம்மாதிரியான சூழலில் மனிதர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காப்பாற்றுவது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
எரிமலை குழம்பு கடலில் நுழைந்தால் அது அருகில் இருப்பவர்களை கொல்லும் என்கிறது அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பு.
இம்மாதிரியான நீரும் எரிமலை குழம்பும் ஒன்று இணைந்தால் அது நச்சு மூடுபனியை உருவாக்கும் அது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆபத்தானது.
"இந்த உருகிய பாறைகள் கடலில் கலந்தால், அடுத்தடுத்து நீராவி உருவாகும். அதிகப்படியான கடல்நீர் ஆவியாகும். ஏனென்றால் எரிமலை குழம்பு 900செல்சியஸுக்கு மேல் இருக்கும். நீரின் வெப்பநிலை 23செல்சியஸாக இருக்கும்". என்கிறார் ஸ்பெயினில் உள்ள லாஸ் பல்மஸ் டெ கிரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஜோஸ் மாங்காஸ். இந்த பல்கலைகழகம் தற்போது வெடித்து எரிமலை குழம்பை கக்கிக் கொண்டிருக்கும் கும்ரே வியெகா எரிமலை உள்ள பகுதியில்தான் உள்ளது.
"நீரில் குளோரைட், சல்பைட், கார்போனேட், ஃபுளுரைட் மற்றும் ஐயோடின் ஆகியவை இருக்கும். நச்சு வாயுக்களும் ஆவியாக மேல் எழும்" என்கிறார் மங்காஸ்
இந்த வாயுக்கள் தோல், கண்கள், மற்றும் மூச்சு குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு எடுத்து காட்டாய் ஹவாயில் உள்ள எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் பெருங்கடல் பகுதியை எடுத்துக்காட்டாக சொல்கிறார். அங்குதான் திடீரென நச்சு புகையை சுவாசித்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
அதேபோன்று இந்த வாயுக்கள் அருகேயுள்ள பகுதிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வீடியோவில் ஹவாயின் கிலாவோ எரிமலையிலிருந்து தீக்குழம்பு பெருங்கடலில் கலந்து ஐட்ரோக்ளோரிக் அமில மூடுபனியை உருவாக்கியது படமாக்கப்பட்டுள்ளது.
பறக்கும் பாறைகளும் வெடிப்புகளும்
அதேபோன்று மற்றொரு ஆபத்து இந்த எரிமலை குழம்பு சேர்ந்து ஒரு டெல்டா பகுகுதியை உருவாக்குகிறது.
தீக்குழம்பால் ஆன இந்த டெல்டா பகுதி கடல் நீரால் குளிர்ச்சி அடைந்து திடீரென உடைந்துவிடுகிறது. இது எப்போது உடைந்து போகும் என விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை.
இம்மாதிரியாக தீக்குழம்பு பெருங்கடலை சந்திக்கும் பகுதியிலிருந்து 300 மீட்டர் தூரம் வரை மக்கள் தள்ளி இருக்க வேண்டும் என அமெரிக்காவின் புவியியல் கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த டெல்டா பகுதிகள் உடையும்போது பாறைகளில் விஷவாயுக்கள் வெளியேறுகிறது என்று தெரிவிகிறார் நேஷனல் ஜியோக்ராஃவிக் இன்ஸ்டிட்யூடின் பேராசிரியர் டே மேட்ரிட்.
அதேபோன்று இந்த எரிக்குழம்பு டெல்டா பகுதிகள் வெறும் கண்களில் காண உறுதியாக தெரிந்தாலும், அது அவ்வாறு இருப்பதில்லை என அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஹவாயில் 1993ஆம் ஆண்டு இதுபோன்று ஒரு டெல்டா பகுதி உடைந்து போனதில் புகைப்படக் கலைஞர் ஒருவர் சிக்கிக் கொண்டு திரும்ப வரவேயில்லை.
அதேபோன்று 2018ஆம் ஆண்டு பேஸ்பால் பந்து அளவிலான தீப்பாறை படகின் மீது விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.
அதேபோன்று இந்த மாதிரி தீக்குழம்பு டெல்டா பகுதியிலிருந்து வரும் அலை நீர் அந்த பகுதியில் உள்ளவர்கள் தீப்புண்களையும் ஏற்படுத்தும்.
ஹவாயை பொறுத்தவரை இம்மாதிரி கடல் நீரும் எரிமலைக் குழம்பும் சந்திக்கின்ற இடத்திற்கு `போர்க்களம்` என்ற பெயர் உண்டு.