Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா விதிக்கும் வரிகளை ஏற்க முடியாது: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Advertiesment
இந்தியா விதிக்கும் வரிகளை ஏற்க முடியாது: அமெரிக்க அதிபர் டிரம்ப்!
, சனி, 29 ஜூன் 2019 (08:57 IST)
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப்.
 
இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது.
 
செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "பல்வேறு நாடுகளும் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி அது நடக்காது," என்று கூறினார்.
 
மேலும், "நல்ல நண்பர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்திய அமெரிக்க இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2018 ஆம் ஆண்டு 142 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது ஏழு மடங்கு அதிகமாகும்.
webdunia
அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமையை இந்தியா இழந்துவிட்டதால், முன்பு அமெரிக்காவில் வரி விலக்கு பெற்றிருந்த 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதி பொருட்கள் பாதிப்புக்குள்ளாகும்.
 
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றுக்கான வரிகளை அமெரிக்கா உயர்த்தியதை அடுத்து, சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியா உயர்த்தியது.
 
இரானிடம் எண்ணெய் வாங்கினால் மற்றும் ரஷ்யாவின் S-400 ஏவுகணைகள் வாங்கும் முடிவை கைவிடவில்லை என்றால், இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணண் அஞ்சான் நெஞ்சருக்கு இடம் இல்லையா? சவுண்ட் விடும் அழகிரி ஆதரவாளர்கள்!