எதிர்கட்சி ஆட்களுக்கு எல்லாம் கட்சியில் இடம் கொடுக்கும் போது அண்ணன் அழகிரியை கட்சியை சேர்க்காதது ஏன் என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் நேற்று ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இதற்கு முன்னர் செந்தில் பாலாஜி, கலையரசன் ஆகியோரும் அமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த போது ஸ்டாலின் அவர்களை எந்த மறுப்பு இன்றி வரவேற்றார்.
இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். கருணாநிதி மறைவின் போது அழகிரி திமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே இப்போது அழகிரி அதரவாளர்கள் எதிர்கட்சியில் இருந்து வருபர்பவர்களை ஏற்றுக்கொள்ளும் ஸ்டாலின் ஏன் அழகிரியை ஏற்கவில்லை என சமூக வலைத்தளங்களில் கேள்வி ஏழுப்புயுள்ளனர்.
அதற்கு திமுக தொண்டர்கள் சிலர், தங்கம் வந்தாலும் தகரம் வந்தாலும் நாங்கள் வரவேற்போம். அழகிரி அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அடிமட்ட தொண்டர்கள் யாரும் சொல்லவில்லை. விரைவில் அஞ்சான் நெஞ்சரை திமுகவில் பார்க்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.