கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் தெரீசா மே.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரீசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7 ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு "தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக" டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரீசா மே கூறியுள்ளார்.
பிரெக்ஸிட்டை அமலாக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.