Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 ஆண்டுகள் கழித்து இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்: எதற்காக தெரியுமா?

Advertiesment
100 ஆண்டுகள் கழித்து இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்: எதற்காக தெரியுமா?
, புதன், 10 ஏப்ரல் 2019 (18:20 IST)
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து நூறு ஆண்டு ஆகியதை அடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  அந்நாட்டின் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்
 
கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிராயுதபாணியாக கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை ஈவுஇரக்கமின்று ஜெனரல் டயர் என்பவனின் உத்தரவின்பேரில் ஒரு படுகொலை சம்பவம் நடந்தது. 
 
webdunia
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 379 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
 
இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகியதை அடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை பறிமுதல் செய்த பணம் எவ்வளவு? தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சி தகவல்