Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நரேந்திர மோதி செய்த பேரழிவுகள்" ட்விட்டரில் பட்டியலிட்ட ராகுல் காந்தி

, புதன், 2 செப்டம்பர் 2020 (15:16 IST)
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, 'மோதி செய்த பேரழிவுகள்' என்று ட்விட்டரில், இன்று காலை பட்டியலிட்டுள்ள பதிவு, இன்று மதியம் வரை சுமார் 23 ஆயிரம் முறைக்கு மேல் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது.

பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசை கடுமையாக பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.
ராகுல் காந்தியும் இன்று காலை அவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் நரேந்திர மோதி அரசு மீதான விமர்சனங்களையும், அரசுக்கு சாதகமில்லாத அலுவல்பூர்வ புள்ளி விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அந்தப் பட்டியல்

'மோடி செய்த பேரழிவால் வாடும் இந்தியா' என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த பட்டியல்
1. வரலாறு காணாத அளவுக்கு ஜிடிபி சரிவு.
2. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை.
3. 12 கோடி வேலை இழப்பு.
4. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு வழங்காமல் இருப்பது.
5. தினசரி எண்ணிக்கை அடிப்படையில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் மரணங்களில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் இருப்பது.
6. எல்லையில் வெளிநாட்டினரின் அத்துமீறல்.
இந்திய - சீன எல்லையில் இருநாட்டினரிடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தி தனது பதிவில் சீனாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் 7 முதல் பேருந்து, ரயில்கள் அனைத்துக்கும் அனுமதி! – தமிழக அரசு உத்தரவு!