Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை விட பாகிஸ்தான் பங்குச் சந்தை அதிவேக வளர்ச்சி - மோசமான பொருளாதார சூழலில் சாத்தியமானது எப்படி?

Advertiesment
India Pakistan
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (21:13 IST)
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தாலும், அந்நாட்டின் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
 
தற்போது, ​​பாகிஸ்தானின் பங்குச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றம் தொடர்கிறது. இந்தியாவை விஞ்சி தெற்கு ஆசியாவிலேயே பாகிஸ்தானில் தான் பங்குச் சந்தை வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. பாகிஸ்தான் தொடர்ந்து பல வாரங்களாக பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக, குறியீட்டெண் ஒவ்வொரு நாளும் புதிய நிலையைத் தாண்டி வருகிறது.
 
கடந்த வர்த்தக வாரத்தின் கடைசி நாளில், பங்குச் சந்தை குறியீட்டு எண் ஒரு நாளில் 65 ஆயிரம் மற்றும் 66 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, வரலாற்றிலேயே அதிகபட்சமாக பாகிஸ்தான் குறியீட்டு எண் 66 ஆயிரத்து 223 புள்ளிகளை எட்டியது.
 
பங்குச் சந்தையில் ஏற்றமான போக்கு அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் தொடங்கியது. அப்போது பங்குச்சந்தை குறியீட்டு எண் 50 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்குள் குறியீட்டில் 16 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
 
பங்குச் சந்தையில் தொடர்ந்து வர்த்தகம் அதிகரித்து வருவதை, பாகிஸ்தானின் பொருளாதாரக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் 11 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
 
மோசமான பொருளாதார சூழலில் சாத்தியமானது எப்படி?
 
பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வுக்கான காரணங்கள் தற்போது அலசப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் பொருளாதாரம் சிரமங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நேரத்தில் இந்த வளர்ச்சி தொடர்வது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
நாட்டின் தொழில்துறை சிக்கல்களால் சூழப்பட்டுள்ளது. அதே நேரம், பண வீக்கத்தால் ஒரு பொதுவான பாகிஸ்தானியர் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார். எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை அதிகரிப்பால் இந்த வாரம் மக்கள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
 
மேலும், பாகிஸ்தானில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளன.
 
இப்போது கேள்வி என்னவென்றால், பங்குச் சந்தையின் சாதனை அதிகரிப்பு பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறதா என்பதும், அது சாமானிய பாகிஸ்தானிய மக்களுக்கும் பயனளிக்கிறதா அல்லது எதிர்காலத்தில் அது நடக்குமா என்பதும் தான்.
 
பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்றத்தால் ஒரு சாமானியனுக்கு எந்தப் பயனும் இல்லை என நிதி ஆலோசகர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
 
கடந்த வாரத்தில் மட்டும் பங்குச்சந்தை குறியீட்டு எண் 4 ஆயிரத்து 532 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது ஒரு சாதனைதான். ஆனால் பொருளாதார காரணங்களால் சந்தையில் இந்த சாதனை ஏற்பட்டுள்ளதா, அல்லது ஊக வர்த்தகத்தின் மூலம் ஏற்பட்டுள்ளதா?
 
இது குறித்து நிதி விவகார நிபுணர் சனா தௌபிக் பிபிசியிடம் பேசினார்.
 
தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வுக்கான காரணங்களைப் பார்த்தால், இந்த உயர்வு, விரைவில் வெடிக்கும் நீர்க் குமிழி போன்றது அல்ல என்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். இது எதிர்காலத்திலும் தொடரலாம்.
 
இந்த உயர்வுக்காக சந்தை நீண்ட நாட்களாக காத்திருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றார். மோசமான பொருளாதார நிலையும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுடன் சந்தையில் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்ததும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
 
அமெரிக்காவில் ஆசிரமம் தொடங்கிய ஓஷோ சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?
 
எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட சில துறைகளில் அதிக முதலீடுகள் செய்யப்படுவதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
 
பொருளாதார நிபுணரும், பஞ்சாப் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணருமான சியாம் அலி, பாகிஸ்தான் சந்தை உயர்வுக்குப் பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சிக்கு பங்குச் சந்தை எதிர்வினையாற்றியுள்ளது என்றும் ஒப்புக்கொண்டார்.
 
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஊழியர் நிலை ஒப்பந்தம் சந்தையை ஊக்குவிப்பதாக அவர் கூறினார். பாகிஸ்தானின் சில பொருளாதார குறியீடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மை.
 
நிதி விவகார நிபுணர் சமியுல்லா தாரிக் கூறுகையில், பங்குச் சந்தை மேலும் உயரலாம் என்றும், வரும் மாதங்களில் சந்தை 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் புள்ளிகள் வரை உயரலாம் என்றும் தெரிவித்தார்.
 
பள்ளி செல்ல 40 கி.மீ. பயணம் - சென்னை அனகாபுத்தூர் மாணவர்களுக்கு என்ன பிரச்னை?
 
பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கும், தற்போதைய பங்குகளின் விலை ஏற்றத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.
 
பங்குச் சந்தையில் ஏற்றம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?
 
பாகிஸ்தானின் சில பொருளாதார குறியீடுகள் சமீபத்திய வாரங்களில் சற்று மேம்பட்டுள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் ஒரு குறைப்பு மற்றும் மாற்று விகிதத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தொழில்துறை வளர்ச்சியின் வேகம் இன்னும் மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுடன் பணவீக்கத்தால் சாமானியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
ஆனால் நாட்டின் பொருளாதாரம் பற்றி பங்குச் சந்தை எதைக் காட்டவிரும்புகிறது என்ற கேள்விக்கு, சனா தௌபிக் பதில் அளிக்கையில், பொருளாதாரம் சீரடைவதை அடிப்படையில் பங்குச் சந்தை சுட்டிக்காட்டுகிறது என்பதுடன், எதிர்காலத்தில் பொருளாதார முன்னணியில் சாதகமான சூழ்நிலை உருவாகும் என்பதையும் காட்டுகிறது.
 
இதை கூர்ந்து கவனித்தால், பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் மிகப்பெரியது செலாவணி விகிதத்தை வலுப்படுத்துவதாகவும், நாட்டின் வெளிநாட்டு நிதியளிப்புத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தான் பங்குச் சந்தை முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.
 
“பொருளாதார நிலை முன்னேற்றம் அடைந்து வருவதை சந்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த நேரத்தில் மிகப்பெரிய பிரச்சனை பணவீக்கம் என்பதும் உண்மைதான். இது பாகிஸ்தானியர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.”
 
இது குறித்து சியாம் அலி கூறுகையில், பொருளாதாரம் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த பொருளாதார நெருக்கடியின் வீச்சு குறைந்து என்றும் தெரிவித்தார். மேலும், சந்தை சரிவடைந்திருந்த நிலையில், தற்போது அதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது பிரச்னைகள் குறைந்து வருவதன் நேர்மறை விளைவு தான் இது என்றும் அவர் கூறினார்.
 
நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி?சோதனையில் பங்கேற்ற இளைஞர்கள் கூறியது என்ன?
 
நாடு முழுவதும் பண வீக்கம் அதிகரித்துள்ளதால் பாகிஸ்தான் நாட்டின் சாமானிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
 
சந்தை ஏற்றத்தால் சாமானிய மக்களுக்கு என்ன லாபம்?
தற்போது பாகிஸ்தானில் பணவீக்கம் 30 சதவீதமாக உள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மற்றும் உணவுப் பொருட்களின் அதிகப்படியான விலைகளால் பொதுவான பாகிஸ்தானியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
 
சந்தை ஏற்றத்தால் ஒரு சாமானியனுக்கு நேரடிப் பலன் இல்லை. ஆனால் நிறுவனங்கள் நல்ல வருமானம் பெற்று, போனஸ் பங்குகளாகவும், லாபமாகவும் விநியோகித்தால், பங்குகளை வாங்கும் சாமானியர்களுக்குப் பலன் கிடைக்கும் என்கிறார் சியாம் அலி. ஆம், அவர்கள் பயனடைகிறார்கள்.
 
"இதன் மூலம், நிறுவனங்கள் நன்றாக சம்பாதித்தால், எதிர்காலத்தில் மூலதனத்தை முதலீடு செய்து உற்பத்தியை அதிகரிக்க முடியும். இது பொருளாதாரத்தில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வர உதவும். இது சாமானியர்களுக்கு வேறு வழியில் பயனளிக்கும்."
 
ஆனால், பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்றத்தால் ஒரு சாமானியனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை சியாம் அலி தெளிவுபடுத்தினார்.
 
தற்போது பங்குச் சந்தையில் மூலதன முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சம் என்றும், 22 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது ஒன்றும் இல்லை என்றும் சனா தௌபிக் கூறினார்.
 
இதன் பொருள் பாகிஸ்தானின் பங்குச் சந்தையின் வளர்ச்சி ஒரு சாமானியனின் பொருளாதார நிலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பங்குச் சந்தை நன்றாகச் செயல்பட்டு பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டினால் அது எதிர்காலத்தில் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கக்கூடாது.
 
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? – படங்கள்
 
வங்கித்துறை சார்ந்த பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
 
பாகிஸ்தான் பங்குச் சந்தை உயர்வுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வுதான் காரணம்.
 
இதில், சில துறைகளின் செயல்திறன் அதிகமாக இருந்ததால், பங்குச் சந்தை தற்போது வரலாற்று உச்சத்தில் உள்ளது.
 
இது குறித்து சனா கூறுகையில், இந்த நேரத்தில் வங்கிகளின் பங்குகளில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுவதாகவும், இதன் காரணமாக வங்கிகள் அதிக வருமானம் ஈட்டுவதாகவும், இது நாட்டில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக இருப்பதாகவும் கூறினார்.
 
இதேபோல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் நிறைய அதிகரித்துள்ளன. இதில் அந்நிய மூலதன முதலீடு பற்றிய தகவல்களும் உள்ளன என்று அவர் கூறுகிறார். எண்ணெய் விலை உயர்வால், அத் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளின் பங்குகள் தற்போது அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
 
நடப்பு வாரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வைக் கவனித்தால், ஒரே வாரத்தில் வங்கிகளின் பங்குகளின் விலை 1,704 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் செயல்படும் நிறுவனப் பங்குகளின் விலைகள் கிட்டத்தட்ட ஆயிரம் சதவீதம் அதிகரித்திருக்கின்றன. உரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலைகளிலும் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
 
மலேசியா செல்ல இனி விசா வேண்டாம்! இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்
 
வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பாகிஸ்தான் பங்குச் சந்தை இப்போது முன்னேற்றமடைவதைப் போல் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால் மட்டுமே சாமானிய மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
 
வெளிநாட்டுப் பணமும் முதலீடு செய்யப்படுகிறதா?
பங்குச் சந்தையின் வரலாற்று ஏற்றத்தில், உள்ளூர் மூலதன முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை வாங்கும் போக்கு காணப்பட்டது. இதனுடன், இப்போது வெளிநாட்டு மூலதன முதலீட்டாளர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பதைக் காணலாம்.
 
தற்போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலதன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் பெரும் எண்ணிக்கையில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டு இருபது முதல் முப்பது மில்லியன் டாலர்கள் வரை வெளிநாட்டு மூலதன முதலீட்டு வாய்ப்பு வர இருப்பதாகவும் சனா தௌபிக் கூறினார்.
 
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் அந்நிய மூலதன முதலீட்டின் தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில், சந்தையில் 35 மில்லியன் டாலர்கள் மூலதன முதலீடு இருந்த நிலையில், இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிக மூலதன முதலீடு ஆகும்.
 
டிசம்பர் முதல் வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் 11 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் சடலத்திலிருந்து உடல் உறுப்புகள் அகற்றம்! அதிர்ச்சி சம்பவம்