பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் பறந்து வந்த ட்ரோன் ஒன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ரோரன் கிராமம் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. நேற்று அந்த பகுதியில் மர்மமான முறையில் ஒரு ட்ரோன் பறந்து வந்துள்ளது. அதை அப்பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
வயலில் விழுந்த அந்த ட்ரோனை பரிசோதித்ததில் அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ட்ரோனில் இருந்த சிறிய பையில் 450 கிராம் அளவில் ஹெராயின் போதை பொருள் இருந்துள்ளது. ட்ரோனையும், ஹெராயினையும் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ட்ரோன் வழியாக போதை பொருளை கடத்த முயன்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளது.