பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் மூன்று ரன்கள் அடித்த பேட்ஸ்மேனுக்கு 7 ரன்கள் கிடைத்த ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தபோது மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் அடித்தார்.
அவர் அப்ரார் வீசிய பந்தை அடித்த போது அந்த பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. பில்டர் அந்த பந்தை தடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். ஆனால் அதற்குள் மேல் மூன்று ரன்கள் ஓடி விட்டார். அவருக்கு மூன்று ரன்கள் கிடைத்தது. இந்த நிலையில் எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்து வந்த பந்தை ரன் அவுட் செய்வதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எறிந்த நிலையில் அந்த பந்து ஓவர் த்ரோ என்ற வகையில் கூடுதலாக நான்கு ரன்கள் கிடைத்தது.
இதனை அடுத்து ஒரே பந்தில் 7 ரன்கள் பெற்ற மேட் ரென்ஷா அரை சதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.