Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவை விட்டு வெளியேறிய செய்தி தொகுப்பாளர்

Advertiesment
ரஷ்யாவை விட்டு வெளியேறிய செய்தி தொகுப்பாளர்
, புதன், 16 மார்ச் 2022 (00:22 IST)
என் டிவி, ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தொலைக்காட்சி சேனல் என் டிவி, ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தொலைக்காட்சி சேனல்Image caption: என் டிவி, ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தொலைக்காட்சி சேனல் ரஷ்யாவின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
“நான் முதலில் ரஷ்யாவை விட்டு வெளியேறினேன். ஏனெனில், அவர்கள் என்னை அப்படியே விடமாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். பின்னர் நான் என் ராஜினாமாவை சமர்ப்பித்தேன்,” என்று என் டிவியின் லிலியா கிலேயேவா, முதன்மை ப்ளாக்கர் இல்யா வர்லமோவிடம் கூறினார்.
 
கில்டேயேவா செகோட்னியாவில் ஒரு தொகுப்பாளராக இருந்தார். இது ரஷ்யாவின் மூன்றாவது மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிலையமான என் டிவியின் முதன்மையான மாலை நேர செய்தி நிகழ்ச்சியாகும். இந்த சேனல், எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமுக்கு சொந்தமானது மற்றும் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு ஆதரவாக உள்ளது.
 
2021-ஆம் ஆண்டில், “வெகுஜன ஊடகங்களை வளர்ப்பதில் நிகழ்த்திய சாதனைகளுக்கு” அதிபர் புதினின் நன்றியைப் பெற்ற அதிகாரபூர்வ பத்திரிகையாளர்கள் பட்டியலில் கில்டேயேவா சேர்க்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டில், “ரஷ்ய கூட்டமைப்பில் குடிமைச் சமூகத்தை வளர்ப்பதற்கான தகவல் வழங்கல் மற்றும் ஆக்கப்பூர்வமான சமூக செயல்பாடு” ஆகியவற்றுக்காக அவருக்கு புதினிடமிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
கில்டேயேவாவின் புறப்பாடு, நேற்றிரவு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சேனல் 1-ல் செய்தி ஆசிரியர் ஒருவரின் போர் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மனைவி பெண் அல்ல…ஆண்! மனு தாக்கல் செய்த கணவன்! நீதிமன்றம் தள்ளுபடி!