Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட வேண்டும்” - சீனா கருத்து

காஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட வேண்டும்” - சீனா கருத்து
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (21:30 IST)
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சீன கருத்து தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "காஷ்மீர் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்," என்று கூறி உள்ளார்.
 
மேலும், "சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது," என்றும் கூறி உள்ளார்.
 
கேள்வி: லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதே. அந்தப் பகுதியில்தான் சீனாவின் மேற்கு எல்லை வருகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?
 
பதில்: சீன - இந்திய எல்லையின் சீனாவின் மேற்கு பகுதியை, இந்தியா தனது நிர்வாக ஆளுகைக்குள் கொண்டிருப்பதை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் இப்போதும் மாற்றம் இல்லை. சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் அது நடைமுறைக்கு வராது. எல்லைத் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் விவேகமாக இருக்க வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு ஏற்றபடியாக இருக்க வேண்டும். எல்லைத் தொடர்பான பிரச்சனைகளை மேலும் சிக்கலில்லா வண்ணம் இருக்க வேண்டும்.
 
கேள்வி: கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் துருப்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்தியா அதிகளவில் துருப்புகளை அதன் நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீருக்கு அனுப்பியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தையும் ரத்து செய்துள்ளது. இதற்கு சீனாவின் எதிர்வினை என்ன?
 
பதில்: ஜம்மு & காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து சீனா கவலைக் கொள்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் உறுதியானது. இருதரப்பும் நிதானத்துடனும் மற்றும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். காஷ்மீரில் இதுபோன்று நிலவும் நிலையில் மாற்றம் கொண்டு வரும் மற்றும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் இருதரப்பும் இறங்கக் கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருதரப்புகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். அந்தப் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசையாக சிறுமி வளர்த்ததை வெட்டி எறிந்த அதிகாரி...சிறுமிக்கு ’அது ’ திரும்ப கிடைத்தா ? வைரல் வீடியோ!