Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் பிரச்சனை: டுவிட்டரில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

காஷ்மீர் பிரச்சனை: டுவிட்டரில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (20:14 IST)
காஷ்மீர் மாநிலத்திற்கு உரிய 370ஆவது சிறப்பு அந்தஸ்து பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததோடு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுகுறித்த மசோதா வெற்றிகரமாக மாநிலங்களவை மற்றும் மக்களவை நிறைவேற்றிய மத்திய அரசு விரைவில் இரண்டு யூனியன் பிரதேசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து இந்திய, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அப்ரிடி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் கருத்து மோதலை வெளிப்படுத்தியுள்ளனர் 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி இதுகுறித்து கூறிய போது, காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் ஐநா சபை உறுதியளித்தவாறு வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது. ஐநா சபை உருவாக்கப்பட்டதே இதற்காகத்தான். அது ஏன் தற்போது தோன்றுகிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
அப்ரிடியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறியதாவது: இந்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கைகள்> இதற்கு குரல் கொடுக்கும் அஃப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேச மறந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு 'கவலை வேண்டாம் மகனே இவை அனைத்தும் தீர்க்கப்படும்' என்று கூறியுள்ளார்
 
இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் காஷ்மீர் பிரச்சனை குறித்து டுவிட்டரில் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இருதரப்பு ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை கமென்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய வெடிப்பு : மக்கள் அதிர்ச்சி