Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சராவதற்கு கல்வி தகுதி அவசியமா?

Advertiesment
அமைச்சராவதற்கு கல்வி தகுதி அவசியமா?
, திங்கள், 11 ஜூன் 2018 (14:37 IST)
எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஜி.டி. தேவே கௌடாவை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமித்ததில் என்ன தவறு? என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
 
முதல்வர் குமாரசாமியின் இந்த கேள்வி ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நன்கு படித்தவர்களை மட்டுமே அமைச்சராக்க வேண்டும் என்று கூறுவது சரியா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் பின்வருமாறு... ளை தொகுத்து வழங்குகிறோம்...
 
படித்தவர்கள்தான் அமைச்சராக வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அதிகம் படித்தவர்களைவிட படிக்காதவர்களுக்குதான் கல்வியின் அருமை தெரியும். ஒரு முதல்வர் வேட்பாளரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருப்பதன் மூலம் ஜி.டி. தேவே கௌடாவின் அரசியல் திறன் நமக்கு தெரிகிறது. நிச்சயம் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருவார். ஒரு துறையில் சாதிக்கவும் மாற்றங்களை கொண்டு வரவும் பிரச்சனைகளை நீக்கவும் அத்துறையில் உயர்ப்படிப்பு மட்டும் படித்தால் போதாது அத்துறையில் அர்ப்பணிப்பு, அறிவுக்கூர்மை ஆகியவை வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் முத்துச்செல்வம் என்ற ஃபேஸ்புக் நேயர்.
 
அமைச்சராவதற்கு கல்வி தேவையில்லை, நேர்மையும் நல்ல மனமும் இருந்தால் போதும், காமராஜரைப் போல என்று சரோஜா பாலசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
சிறந்த மக்கள் சேவையாற்ற நேர்மையும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் போதும். கல்வித்தகுதி ஒரு பொருட்டல்ல என்று வீரசோழன் என்பவர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூர் உச்சிமாநாடு: அமெரிக்காவுடன் 'புதிய உறவை' எதிர்பார்க்கும் வட கொரியா