காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை விமர்சிக்கும் டிடிவி தினகரன் எம்பியாக இருக்கும் போது எத்தனை முரை காவிரி பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வரும் துணை முதல்வரும் வாரிசு அடிப்படையில் உயர்பொறுப்புக்கு வரவில்லை அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் சட்டசபையில் தினகரனை தாக்கி பேசினார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தினகரன் கூறியது பின்வருமாறு, என்னை எம்பி ஆக்கியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் அவர் சட்ட போராட்டம் நடத்தி வந்தார்.
காவிரி வாரியத்தை அமைக்க மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. வாரியம் அமைக்க கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி கூட பேசவில்லை, எனவே நான் அரசை விமர்சிக்கவில்லை.
மேலும், அமைச்சர் வேலுமணி பேசுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் பதவி இல்லை என்றால் அவருக்கு மதிப்பே கிடையாது. அவர் பேசிவதற்கெல்லாம் என்னிடம் பதில் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.