இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத்தேர்வான நீட் தேர்வு குறித்த அறிவிப்பைத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதில், MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET – UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17ல் நடைபெறும். ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மே 6 ஆம் தேதி வரை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.