Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிரம்ப் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன?

டிரம்ப் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன?
, திங்கள், 5 அக்டோபர் 2020 (09:38 IST)
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து வாகன அணிவகுப்பில் இருந்தபடியே கையசைத்தார்.

வெளியே கூடியுள்ளவர்களைப் பார்க்க 'சர்ப்ரைஸ் விசிட்' ஒன்றை தர இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்த சற்று நேரத்தில் அவர் முகக்கவசம் அணிந்தபடி தனது வாகன அணிவகுப்பில் வந்து ஆதரவாளர்களை பார்த்தார்.

அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் திங்களன்று அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவரது நுரையீரல் செயல்பாடு எப்படி உள்ளது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

வாஷிங்டன் டிசி அருகே உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் டிரம்ப்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு அவரது உடலில் ஆக்சிஜன் அளவு இரண்டு முறை குறைந்துள்ளதாக அந்த மருத்துவ மையத்தின் மருத்துவர் சான் கான்லி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதனால் தற்போது அவருடைய அதிபர் தேர்தல் பிரசாரம் தடைபட்டுள்ளது.

வெள்ளியன்று டிரம்புக்கு உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்தை விட குறைந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நல்ல உடல் நலத்தில் இருப்பவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 95 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்.

சனியன்று அவரது ஆக்சிஜன் அளவு மேலும் குறைந்து 93 சதவிகிதம் ஆனது.

அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு இதுவரை குறைந்தபட்சம் ஒரு முறை செயற்கை ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு சுமார் ஒரு மணி நேரம் கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்று மருத்துவர் சான் தெரிவித்துள்ளார்.

தீவிர கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள டெக்சாமெத்தசோன் மாத்திரையும் டிரம்புக்கு கொடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

74 வயதாகும் டிரம்ப் உடல்பருமன் வாய்ந்தவராகவும், அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள வயதுடையவராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்னும் சோதனை நிலையிலேயே இருக்கும் பல மருந்துகளின் கலவை அவருக்கு வெள்ளியன்று வழங்கப்பட்டது.

அன்றே வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான ரெம்டிசீவர் மருந்தும் அவருக்கு வழங்கத் தொடங்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு அது அவருக்கு வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை முதல் அவருக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றும் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு இயல்பானதாக உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்பின் நுரையீரல் செயல்பாட்டில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு மருத்துவர் சான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பொங்கலை 8 மாசம் வெச்சு சாப்பிடலாமா? – திட்டி ட்ரெண்டான பயணிக்கு ஐஆர்சிடிசி விளக்கம்