அனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி விடுதலை செய்தது ஜிப்ரால்டர்.
எனினும் அந்த இரானிய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிட்டதையும் மீறி அக்கப்பலைக் கைப்பற்ற அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உத்தரவுக்கு பிரிட்டன் மாற்று ஜிப்ரால்டர் அதிகாரிகள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை. கிரேஸ்-1 எனப்படும் இரான் எண்ணெய் கப்பல் ஜூலை 4 அன்று பிரிட்டன் கடற்படையினரால் நிறுத்தப்பட்டது.
ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு அமெரிக்காவின் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கும் என ஜிப்ரால்டரின் முதல்வர் ஃபெபியன் பிகார்டோ கூறியுள்ளார்.
இந்த கப்பல் வியாழக்கிழமை வரை ஜிப்ரால்டரில் இருந்தது. ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சிலர், அது 180 டிகிரி வரை நகர்ந்ததாக கூறியிருந்தனர்.
அது கடல் அலையினால் திரும்பியதா இல்லை அங்கிருந்து செல்ல தயார்படுத்தி கொண்டதா என்பது தெரியவில்லை.