Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொற்றிக்கொண்ட பதற்றம்: முறிந்தது வட மற்றும் தென் கொரிய உறவு!

தொற்றிக்கொண்ட பதற்றம்: முறிந்தது வட மற்றும் தென் கொரிய உறவு!
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (15:10 IST)
தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது.
 
தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் என்றும் வட கொரியா கூறியுள்ளது.
 
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆற்றிய உரைக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில்தான் வடகொரியா இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், வட கொரியா தனது இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.
 
வட கொரியா சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு, இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவியது.
 
கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை டிரம்புடன் மேற்கொண்டுள்ள நிலையில் வட கொரியா இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் – அதிர்ச்சி வீடியோ