Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரேக்க, ரோமானிய பேரரசர்கள் பெண்களுடன் களியாட்ட விருந்துகளில் திளைத்தார்களா? உண்மை என்ன?

Advertiesment
abuse
, செவ்வாய், 27 ஜூன் 2023 (17:26 IST)
உணவும், பாலியலும் இணைந்த ஆடம்பர களியாட்ட விருந்தை விவரிக்கும் ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள்
 
வரம்பு மீறிய செயல்கள் அனைத்தையும் குறிக்க இன்று ‘களியாட்டம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
தார்மீக ரீதியான அனைத்து உறவுகளில் இருந்தும் விடுபட்ட ஓர் பண்டைய சமூகத்தில், மனித சதைப் பற்றின் மீதான கொண்டாட்டமாக ‘களியாட்டம்’ இருந்து வந்ததாக தோன்றுகிறது.
 
பண்டைய கிரேக்க -ரோமானிய மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் அரங்கேறிய களியாட்ட விருந்துகள் குறித்து, பெடெரிகோ பெலினி எழுதி இயக்கிய ‘சாட்டிரிகான்’ போன்ற திரைப்படங்களில் மிகையாகவோ, குறைவாகவோ சித்தரிக்கப்பட்டுள்ளன.
 
ஆனால், களியாட்ட விருந்துகள் குறித்த உண்மை வரலாறு என்னவாக இருந்தது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
 
களியாட்டத்தை குறிக்கும் Orgy என்ற வார்த்தை கிரேக்க சொல்லான Orgia வில் இருந்து வந்தது.
 
ஆரம்பத்தில் இந்த சொல் ‘டயோனிசஸ்’ போன்ற தெய்வங்களின் நினைவாக மேற்கொள்ளப்பட்டு வந்த சடங்குகளை குறித்தது. இயற்கையின் மீள்ருவாக்கத்தை கொண்டாடும் விதமாக இந்த வழிபாடு இருந்து வந்தது.
 
இந்த வழிபாட்டு முறைகள், ‘மர்ம வழிபாட்டு முறை’கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது தங்களைப் பற்றிய ரகசியங்களை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தமாட்டோம் என்று முன்பே உறுதியளிக்கும் ஆண்களும், பெண்களும் மட்டுமே இந்த வழிபாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
 
ஆனால், இந்த வழிபாட்டில் இருந்த மர்ம நிலையின் காரணமாக இந்தச் சடங்குகள் அதிகம் அறிப்படாதவையாக இருந்தன. கூட்டு போதை தேடுவதை நோக்கமாக கொண்ட பரவச நிலைகளையும், அப்போது வெளிப்படுத்தப்பட்ட பாலியல் வடிவங்களையும் இந்தச் சடங்குகள் குறிக்கலாம்.
 
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் இறுதி வரை, குறிப்பாக பிரெஞ்ச் இலக்கியங்களில் களியாட்டம் என்ற சொல் கூட்டுப் பாலியல் நடவடிக்கைகளை குறிப்பதாக இடம்பெற்றிருந்தது. பெரும்பாலான நேரங்களில் இச்சொல் உணவு வகைகள் மற்றும் மதுபானங்களுடன் அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.
 
ரோமானிய காதல் தேவதையான வீனசின் அழகை ஒத்த நிர்வாண பெண்கள் பங்கேற்கும் ஓர் இரவு நேர விருந்து தான் களியாட்டம் (Orgy) என்று, குஸ்டாவ் ப்ளூ பர்ட் 1839 இல் எழுதிய தமது ஸ்மார்ஹ்வில் கதையில் குறிப்பிட்டுள்ளார்.
 
நீரோ மன்னன் காலத்தில் ரோமில் நிகழ்ந்த துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் ஃபெலினியின் 'சாட்டிரிகான்' திரைப்பட காட்சி
 
சிற்றின்பத்தை அனுபவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட விருந்துகள் தொடர்பான குறிப்புகள் பண்டைய நூல்களில் நிறைய இடம்பெற்றுள்ளன.
 
கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க சொற்பொழிவாளரான எஸ்கின்ஸ், திமார்கஸ் பிரபுக்கு எதிராக எழுப்பிய குற்றச்சாட்டு குறித்த விவரங்களை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கூறலாம். “திமார்கஸ் மிகவும் வெட்கக்கேடான இன்பங்களில் ஈடுபட்டதாகவும், உன்னதமான மனிதன் மேற்கொள்ளக்கூடாத எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுப்பட்டார்” என்று எஸ்கின்ஸ் குற்றம்சாட்டினார்
 
இதுபோன்ற ஆவண ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, களியாட்ட விருந்து எனும் நிகழ்வு, நவீன நாகரிக வாழ்க்கை முறையின் கண்டுபிடிப்பாக இருக்க முடியாது என்று உறுதியாகிறது.
 
எஸ்கின்ஸ் குற்றம்சாட்டும் அளவுக்கு திமார்கஸ் அப்படி என்ன வெட்கக்கேடான செயல்களில் ஈடுபட்டார்?
 
புல்லாங்குழல் இசைக் கலைஞர்களையும், பாலியல் தொழில் புரியும் பெண்களையும் தனது வீட்டிற்கு ஒருசேர அழைத்த திமார்கஸ், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஆனந்த கூத்தாடினார்.
 
புல்லாங்குழல் இசைக் கலைஞர்களை அவர்களின் திறமைக்காக மட்டும் திமார்கஸுன் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. அவர்களின் காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள, பாலியல் தொழில் புரியும் பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு அங்கு கிடைத்தது.
 
பாலியல் தொழில் புரியும் பெண்களை பணிக்கு அமர்த்துவதும், விலையுயர்ந்த மீன்களை வாங்குவதும் ஒருவரின் களியாட்ட மனநிலையின் வெளிப்பாடாக கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த டேமோஸ்தீனஸ் உள்ளிட்ட கிரேக்க சொற்பொழிவாளர் கருதினர்.
 
கிமு 346 இல், கிரேக்க நாட்டின் ராணுவத்தை அச்சுறுத்தி வந்த மாசிடோனியா நாட்டு அரசரான இரண்டாம் ஃபிலிப்பிடம், ஏதென்ஸ் பேரரசு தூதர்களை அனுப்பியது. ஆனால் அந்த தூதர்களில் சிலர் ஏதென்ஸ் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக டேமோஸ்தீனஸ் குற்றம்சாட்டினார்.
 
அதாவது, மாசிடோனியா மன்னரால் விலைக்கு வாங்கப்பட்ட ஏதென்ஸ் நாட்டு தூதர்களில் ஒருவர், தவறாக சம்பாதித்த பணத்தை களியாட்டத்துக்கு பயன்படும் வகையில், விலை அதிகமான மீன்களை வாங்கவும், பாலியல் தொழில்புரியும் பெண்களுக்காகவும் விரயம் செய்ய பயன்படுத்தினார் என்று டேமோஸ்தீனஸ் குறிப்பிட்டிருந்தார்.
 
பண்டைய கால நூல்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள களியாட்ட விருந்துகள்
 
கிரேக்க சொற்பொழிவாளர்களை போலவே, ரோமானிய வரலாற்று ஆசிரியர்களும் களியாட்ட விருந்துகள் குறித்து குறிப்பிட்டுள்ளனர். பாலியல் புணர்வும், உணவு விருந்தும் சேர்ந்ததாக களியாட்டத்தை அவர்கள் வரையறுத்தனர்.
 
கி.மு. 80 களில், சர்வாதிகாரியாக அறியப்பட்ட அரசியல் தலைவரான சுல்லா தான் ரோமில் முதன்முதலாக பாலியல் விருந்துக்கு ஏற்பாடு செய்தவறாக இருந்திருப்பார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
 
கிழக்கு கிரேக்கத்தில் ராணுவம் தொடர்பான பணிகளை அவர் முன்னின்று நடத்திய போது, அங்கு நடைமுறையில் இருந்த களியாட்ட விருந்தை ரோம் நாட்டில் அவர் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
சுல்லா காலை வேளைகளில் குடித்துவிட்டு நடிகைகள் மற்றும் இசைக் கலைஞர்களுடன் கும்மாளம் இடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று தத்துவவாதியான புளூடார்க் கூறியுள்ளார்.
 
சிற்றின்ப நோக்கிலான நடனங்களை ஆடுவது, பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு பிரதான பணியாக இல்லாமல் இருந்தாலும், பாலியல் செயல்களை உருவகப்படுத்தும் நோக்கில் அவர்கள் சிற்றின்ப நடனங்களில் பங்கேற்றனர்.
 
ஜூலியோ -கிளாடியன் வம்சத்தின் ரோமானியப் பேரரசர், தனது காப்ரி அரண்மனையில் ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு துணிவுடன் ஏற்பாடு செய்தவராக இருந்துள்ளார். அந்த ஆபாச நடன நிகழ்ச்சியில் பங்கேற்க இளம் நடிகைகள் அடங்கிய குழுவையும் அவர் நியமித்திருந்தார்.
 
டைபீரியசின் வாரிசான கலிகுலா, விருந்தினர்களின் பார்வையில் தனது சகோதரிகளுடன் உறங்கினார் என்று கூறப்படுகிறது, இது தகாத உறவு மற்றும் அதனை காட்சிப்படுத்துதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு குற்றங்களாக கருதப்பட்டது.
 
அத்துடன் அவர் தனது மனைவியான செசோனியாவை போர் வீரனை போல் அல்லது நிர்வாணமாக குதிரையின் மீது அமரவைத்து அழகு பார்த்தார். கலிகுலாவின் மனம் கவர்ந்த பேரரசி கண்டுகளிப்பதற்காக, தன் மனைவியை அவர் இவ்வாறு செய்தார்.
 
 
கலிகுலாவின் அதிகார துஷ்பிரயோகம், பாலியல் வக்கிரம் உள்ளிட்டவை குறித்து சொல்லப்பட்ட கதை.
 
20 ஆண்டுகளுக்கு பிறகு, ரோமானிய பேரரசரான நீரோ, தமது பண்டிகைகளை நண்பகல் தொடங்கி இரவு வரை கொண்டாடி தீர்த்தார் என்று எழுதுகிறார் வரலாற்று ஆசிரியரான சூட்டோனியஸ். இந்த நீண்ட நேர விருந்துகளின் போது அதில் பங்கேற்றவர்களின் அனைத்து புலன்களும் திருப்திப்படுத்தபட்டன. உணவு, இசை மற்றும் உடல் இச்சைகளுக்கு அடிமையானவர்களுக்கு நீரோ மன்னரின் விருந்து நல்வாய்ப்பாக அமைந்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கிமு 220 இல் பேரரசர் எலகபாலின் விருந்து ஒன்றில் பங்கேற்ற சிலர், களியாட்டத்தின் உச்சத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் மூச்சுத் திணறி இறந்தனர் என்று ‘ ஹிஸ்டோரியா அகஸ்டா’ என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இன்று நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளை போல, ரோமானியப் பேரரசில் களியாட்டங்கள் அதிகமாக நடைபெறவில்லை. எனவே. களியாட்ட விருந்துகள் குறித்து பண்டைய கால எழுத்தாளர்கள் கூறியுள்ளவற்றின் அர்த்தத்தை நாம் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது எனவும் கூறுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
 
விருந்து என்ற பேரிலும், அளவில்லா குடிப்போதையிலும் காமத்தை இழிவான முறையில் மேற்கொள்ளப்பட்டதை கண்டிப்பதே பண்டைய கால எழுத்தாளர்கள் மற்றும் சொற்பொழிவாளர்களின் நோக்கமாக இருந்தது என்கின்றனர் அவர்கள்.
 
ரோம் முதல் பாபிலோன் வரை பரவியிருந்த ‘களியாட்ட விருந்து’ கலாசாரம் குறித்து பண்டைய கால நூல்கள் விவரிக்கின்றன.
 
விருந்துகள் குறித்து அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களில் இருந்து விலகி, டேமியன் சாசெல்லின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பாபிலோன்’ திரைப்படம், களியாட்டம் மீதான தார்மீக கண்டன நிலைப்பாட்டை தெளிவாக எடுக்காமல், பெரிய களியாட்ட காட்சியை சித்தரித்திருந்தது.
 
இதன் காரணமாக வரவேற்பும், எதிர்ப்பும் என ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை அந்த திரைப்படம் பெற்றது.
 
இது பிபிசி முண்டோவில் வெளியான 'தி கான்வர்சேஷன்' கட்டுரை
 
இந்தக் கட்டுரையின் ஆசிரியர் கிறிஸ்டியன் -ஜார்ஜஸ் ஸ்வைன் டிசெல், டி லோரெய்ன் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால வரலாற்று துறை பேராசிரியராக உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை வாதத்தை இருட்டடிப்பு செய்யும் முன்னணி ஊடகங்கள்..!