சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமாக சௌதியில் பிரதமர் பதவி என்பது அரசர் பதவியில் இருப்பவர் தன்வசம் வைத்திருக்கும் பதவியாகும். ஆனால், அப்பதவிக்கு இளவரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான அரசர் சல்மான் பின் அப்துல்லாசிஸ்-இன் 37 வயது மகனான முகமது பின் சல்மான் எண்ணெய் வளம் மிக்க இந்த வளைகுடா நாட்டின் நடைமுறை ஆட்சியாளராக ஏற்கெனவே பார்க்கப்படுகிறார். அதாவது மன்னராக இவரது தந்தை இருந்தாலும் நிர்வாக முடிவுகளை இவரே எடுப்பதாகப் பார்க்கப்படுகிறது.
முகமது பின் சல்மான் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்புகளில் இருந்து பதவி உயர்வு பெறுவதை அறிவிக்கும் அரச ஆணை அடிப்படை சட்டத்தில் விதிவிலக்கை சுட்டிக்காட்டுகிறது.
முகமது பின் சல்மானுக்கு அரசர் வழங்கிய முன்தைய பிரதிநிதித்துவத்துக்கு உகந்ததாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"பட்டத்து இளவரசர் நாட்டின் முக்கிய நிர்வாக அமைப்புகளை ஏற்கெனவே தினமும் கண்காணித்து வருகிறார். அந்த நிலையில் அவரது புதிய பொறுப்பாக பிரதமர் வருகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.
அரச வட்டாரத்தினருக்கு நெருங்கிய சௌதி அரசியல் ஆய்வாளரான அலி ஷிஹாபி, முகமது பின் சல்மானின் பதவி உயர்வு அவரது உண்மையான அதிகாரத்தை முறைப்படுத்துகின்றது. பிற அரசு தலைவர்களை மூத்தவர்களாக பார்க்கின்ற நெறிமுறை சிக்கல்களை நீக்குகிறது. அவர் இப்போது நடைமுறையில் மட்டுமல்ல. அரசாங்கத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார்" என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசர், அவர் கலந்து கொள்கின்ற அமைச்சரவை கூட்டங்களை தலைமை தாங்கி நடத்துவதை தொடர்வார்.
அவருடைய மகன்களில் ஒருவரான இளவரசர் காலித் பின் சல்மான் புதிய பாதுகாப்பு அமைச்சர் என அந்த ஆணை தெரிவிக்கிறது. மூன்றாவது மகனான அப்துல்லாசிஸ் பின் சல்மான், உலகிலேயே பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாட்டின் எரிசக்தி அமைச்சர் என்கிற முக்கிய பொறுப்பில் நீடிக்கிறார்.
2015ஆம் ஆண்டு தந்தை அரசராக வருவதற்கு முன்பு, முகமது பின் சல்மானை பற்றி சௌதி அரேபியாவுக்கு வெளியே யாருக்கும் தெரியாது.
பிற்போக்கான வளைகுடா நாட்டில், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியது மற்றும் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை சார்ந்து இருப்பதை நீக்க முற்படுவது என அவர் கொண்டுவந்த சில சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கக்காக முகமது பின் சல்மான் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா: செல்வச் செழிப்பில் மிளிரும் பாலைவன நாட்டின்
ஆனால், யேமெனில் மனிதாபிமான பேரழிவு ஏற்படுத்திய போரை தொடர்வது மற்றும் முக்கிய சமூக ஊடக பதிவுகளுக்கு கூட கடுமையாக சிறைத் தண்டனை விதிப்பது போன்ற கருத்து வேறுபாடுகளை ஒடுக்கியதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் முகமது பின் சல்மானின் கொள்கைகளை விமர்சித்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட பிறகு, இளவரசரின் சர்வதேச நற்பெயர் கணிசமாக சேதமடைந்தது.
கஷோக்ஜியை பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்கு இளவரசர் அனுமதி அளித்திருந்தார் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் முடிவுக்கு வந்தன. ஆனால் முகமது பின் சல்மான் இதில் தனது ஈடுபாட்டை மறுத்துவிட்டார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளதால், சமீபத்திய மாதங்களில் இந்த இளவரசரை மேற்கத்திய தலைவர்கள் மீண்டும் அரவணைத்து கொண்டனர்.
கஷோக்ஜியின் கொலை தொடர்பாக சௌதி அரேபியாவை ஒதுக்கி வைப்பதாக உறுதிபூண்ட நிலையிலு