போதை மருந்து கடத்தியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சீனா தூக்கு தண்டனை விதித்துள்ளது.
கார்ம் அல்லது கேம் கிலெஸ்பி என்ற அந்த நபர் 7.5 கிலோ போதை மருந்து கடத்தியதாக கடந்த 2013ஆம் அண்டு சீன விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்நபருக்குதான் தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை என்ற தீர்ப்பு வேதனையளிப்பதாக ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான நிலைபாட்டை கொண்டது ஆஸ்திரேலியா. உலகம் முழுவதும் இவ்வாறு மரண தண்டனை விதிப்பது நீக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு போதை மருந்து கடத்தியதாக இதற்கு முன்பும் ஆஸ்திரேலியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.