Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்: 10 முக்கிய தகவல்கள்

இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்: 10 முக்கிய தகவல்கள்
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:22 IST)
உலகின் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.

அப்பாச்சி என்றழைக்கப்படும் இந்த வகை ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஏஎச்-64இ ரகத்தை சேர்ந்த 22 ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்திட்டது.
 
முதல் கட்டமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், எட்டு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா முறைப்படி ராணுவத்தில் இணைத்தார்.
 
பல கட்டங்களாக மீதமுள்ள 14 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டிற்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படுமென்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டரான அப்பாச்சி, தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் விமானப்படையில் பிரதான ஹெலிகாப்டராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இரண்டு டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களை கொண்ட இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
 
அனைத்து விதமான காலநிலைகளிலும் செயல்படும் திறன் மிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் இலக்குகளை கண்டறிய, பின்தொடர, தாக்குதல் தொடுக்க ஏதுவாக லேசர், இன்ஃபராரெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 
அப்பாச்சி ஹெலிகாப்டரால் ஒரே நிமிடத்தில் அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி பறக்க முடியும்.

 
மிக அதிகளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது.

 
துப்பாக்கிகள் மட்டுமின்றி, அதிநவீன ராக்கெட்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள், இரவுநேரத்திலும் அதிவிரைவாக தாக்குதல் நடத்தவல்லது.

 
இந்திய விமானப்படையின் முக்கிய போர் ஹெலிகாப்டராக விளங்கி வரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக்-35 ரக ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்தாண்டிற்குள் அந்த இடத்தை அப்பாச்சி நிரப்பும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்டரி ஒர்க் ஆகவில்லையாம்: நடுரோட்டில் காரையே கொளுத்திய ஆசாமி – வைரலான வீடியோ