Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்

Advertiesment
India Pakistan
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (22:00 IST)
ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள் பற்றிப் பார்போம்.
 
கெளதம் கம்பீருக்கும், ஷாஹித் அஃப்ரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது
 
இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போதெல்லாம் பார்வையாளர்களின் உணர்வுகள் மட்டும் பொங்குவதில்லை. இரு நாட்டு கிரிக்கெட் பிரியர்களின் உணர்வுகளுடன் கூடவே இரு அணி வீரர்களின் உணர்வுகளும் சிலநேரங்களில் கட்டுக்கடங்காமல் போகின்றன.
 
போட்டியில் தோல்வியடையக் கூடாது என்ற மன அழுத்தத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் மென்மையை காட்ட விரும்புவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீரர்களிடையே வாக்குவாதங்கள் கடந்தகாலங்களில் ஏற்பட்டுள்ளன. அத்தகைய ஐந்து நிகழ்வுகளைப் இப்போது பார்ப்போம்.
 
1. அமீர் சோஹைலுக்கும் வெங்கடேஷ் பிரசாத்துக்கும் இடையே மோதல்
 
பாகிஸ்தான் வீரர் அமீர் சோஹைலுக்கும் இந்திய பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கும் இடையே 1996 உலகக் கோப்பையின் போது இந்த மோதல் ஏற்பட்டது. முதலில் மட்டை வீசிய இந்தியா 287 ரன்கள் எடுத்தது.
 
 
பதிலுக்கு மட்டைவீசிய பாகிஸ்தானின் அமீர் சோஹைல் மற்றும் சயீத் அன்வர் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 84 ரன்களை எடுத்தனர்.
 
சோஹைல் நல்ல ஃபார்மில் இருந்தார். சோஹைல் 51 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தார். பந்து கோட்டை தாண்டியபோது, வெங்கடேஷ் பிரசாத்தை நோக்கி மட்டையை நீட்டிய சோஹைல், மட்டையால் பந்தை காட்டினார்.
 
 
சோஹைல் ஒருவேளை தனது ஆக்ரோஷமான பேட்டிங் பாணியின் செய்தியை அவருக்கு கொடுக்க முயன்றிருக்கலாம்.ஆனால் இது வெங்கடேஷ் பிரசாத்தின் மனதை காயப்படுத்தியது. ஆனால், அடுத்த பந்திலேயே பிரசாத் பழிவாங்கினார். சோஹைல் தனது பந்தை மிட்-விக்கெட்டில் ஆட முயன்றார். அவரை ஏமாற்றிய பந்து ஆஃப் ஸ்டம்பை சரித்தது.
 
 
சோஹைலை ஆட்டமிழக்கச் செய்த பிரசாத் அவருக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டினார். இரு வீரர்களுக்கும் இடையேயான இந்த மோதல் குறித்து பல ஆண்டுகளாக விவாதம் தொடர்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் இந்த மோதலை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
 
2. ஷாஹித் அஃப்ரீதி மற்றும் கம்ரான் அக்மலுடன் கௌதம் கம்பீர் மோதிய போது
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு வீரராக அறியப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் 2007-ம் ஆண்டு கான்பூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரீதியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.
 
 
 
கம்பீர் ரன் எடுக்க ஓடியபோது, ​​அஃப்ரீதி மீது மோதினார். ரன்னை முடிக்க விடாமல் அஃப்ரீதி வேண்டுமென்றே தடுக்கிறார் என்று கம்பீர் நம்பினார். இந்த குற்றச்சாட்டுகளை அஃப்ரீதி மறுத்தார். பின்னர் இரண்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் இரு வீரர்களையும் சமாதானம் செய்தார்.
 
 
 
 
இதன் பின்னர், 2010ஆம் ஆண்டு இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்ற ஆசியகோப்பை போட்டியின் போது, ​​பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மலுடன் கம்பீர் சண்டையிட்டார். சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் கெளதம் கம்பீரின் விக்கெட்டுக்கு பின்னால் கேட்ச் பிடித்ததாக காம்ரான் அக்மல் நடுவரிடம் முறையிட்டார். அதை நடுவர் பில்லி பௌடன் ஏற்கவில்லை.

 
இதைத்தொடர்ந்து வந்த ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கம்பீருக்கும், அக்மலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த மகேந்திர சிங் தோனி தலையிட்டு விவகாரத்தை சுமூகமாக தீர்த்துவைத்தார்.
 

 
இலங்கையின் தம்புல்லாவில் 2010 ஆசிய கோப்பை போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் ஷோயிப் அக்தர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 268 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி நான்கு ஓவர்களில் இந்திய அணி 36 ரன்கள் எடுத்தாகவேண்டும்.
 
 
47வது ஓவரில் பந்துவீச ஷோயிப் அக்தர் வந்தார். அவரது இரண்டாவது பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸர் அடித்தார். இந்த சிக்ஸருக்குப் பிறகு இரண்டு வீரர்களும் பரஸ்பரம் கத்துவதை பார்க்கமுடிந்தது.
 
 
இதையடுத்து முகமது அமீரின் பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ஹர்பஜன் சிங்.

 
இந்த சிக்ஸருக்குப் பிறகு, ஷோயிப் அக்தரைப் பார்த்தவாறு ஹர்பஜன் சிங் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார். டிரஸ்ஸிங் அறைக்கு செல்லும்படி ஷோயிப்அக்தர் ஹர்பஜனிடம் கூறினார். இந்த வாக்குவாதத்தை யூடியூப்பிலும் பார்க்கலாம்.
 
 
4. ஷோயிப் அக்தரிடம் ஷேவாக் 'அப்பா, அப்பாதான்' (பாப் பாப் ஹோதா ஹை') என்று சொன்னாரா?
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்திர ஷேவாக். அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷோயிப் அக்தருடன் தனக்கு ஏற்பட்ட தகராறின் கதையைச் சொன்னார்.
 
 
ஷோயிப் அக்தர் 150 கிமீ வேகத்தில் பந்துவீசி, வீரேந்திர ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஜோடியை பிரிக்க விரும்பினார்.
 
 
தான் 200 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், ஹூக் ஷாட்களை அடிக்குமாறு சொல்லியபடி அக்தர், மீண்டும் மீண்டும் பவுன்சர்களை வீசினார் என்றும் ஷேவாக் குறிப்பிட்டார். ஷோயிப் ஷேவாகைத் தூண்டிவிட விரும்பினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஷேவாக் அவரிடம், 'மறுமுனையில் உங்கள் அப்பா பேட்டிங் செய்கிறார். தைரியம் இருந்தால் அவரிடம் சொல்லுங்கள். அவர் அடித்துக்காண்பிப்பார்," என்றார்.
 
 
அடுத்த ஓவரில் டெண்டுல்கருக்கு ஷோயிப் பவுன்சரை வீச, புல் ஷாட் மூலம் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தார். சச்சினின் சிக்ஸருக்குப் பிறகு, நான் ஷோயிப்பிடம், "மகன் மகன்தான். அப்பா அப்பாதான்" என்று சொன்னேன் என்று ஷேவாக் தெரிவித்தார்.
 
 
ஷேவாக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஷோயிப் அக்தர் அப்படியொரு சம்பவத்தை மறுத்துள்ளார். 'ஷேவாக் ஒரு வேடிக்கையான கதையைச் சொன்னார். ஷேவாக் உண்மையில் அப்படி என்னிடம் சொல்லியிருந்தால், நான் அவரை களத்திலேயே அடித்திருப்பேன்," என்றார் அக்தர்.
 
 
ஷோயிப் அக்தர் உண்மையைச் சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக ஷேவாக் மூன்று சதம் அடித்தபோது, ​​சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த இன்னிங்ஸில் எந்த சிக்ஸரும் அடிக்கவில்லை.

 
சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக ஷேவாக் 254 ரன்கள் எடுத்தபோதுதான், ​​டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 2007 இல், ஷேவாக் மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். ஆனால் அப்போது ஷோயிப் பாகிஸ்தான் அணியில் இல்லை.
 
 
5. கிரண் மோரேயின் முறையீட்டை தொடர்ந்து குதிக்கத் தொடங்கிய ஜாவேத் மியான்தத்
கிரண் மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகள் காரணமாக குதிக்கத்தொடங்கிய 
 
கிரண் மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகள் காரணமாக குதிக்கத்தொடங்கிய ஜாவேத் மியான்தத்
 
 
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் சர்ச்சைகளில் ஜாவேத் மியான்தாத்-கிரண் மோரே சர்ச்சையும் ஒன்று.
 
 
1992 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும், கபில் தேவ் 26 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.

 
பதிலுக்கு மட்டை வீசிய பாகிஸ்தான் அணி 17 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அமீர் சோஹைலும், ஜாவேத் மியான்தாத்தும் அணியின் ஸ்கோரை நிலைநிறுத்தினர். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் என்று இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
 
 
மியான்தாத் சச்சின் டெண்டுல்கரின் பந்தை விளையாட முயன்றபோது, ​​விக்கெட் கீப்பர் மோரே கேட்ச்சிற்கு அப்பீல் செய்தார். அதே ஓவரில் மியான்தாத் ரன் எடுக்க ஓடியபோது, ​​மோரே விக்கெட்டை வீழ்த்தி ரன்அவுட்க்கு முறையிட்டார். பின்னர் மியான்தாத் கிரீஸுக்கு உள்ளே வந்தார். இதற்குப் பிறகு, மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகளை கிண்டல் செய்யும்விதமாக விக்கெட்டில் குதிக்கத் தொடங்கினார்.

 
இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த போட்டியின் வெற்றியை விட மியான்தாத் மற்றும் மோரே இடையேயான சர்ச்சையே அதிகம் விவாதிக்கப்படுகிறது.து

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை காரிய கமிட்டி கூட்டம் - காங்கிரஸ் பொ.செ., கே.சி.வேணுகோபால்அறிவிப்பு