Publish Date: Fri, 26 Aug 2022 (14:10 IST)
Updated Date: Fri, 26 Aug 2022 (14:30 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தன்னுடைய பேட் ஸ்டிக்கரை மாற்ற உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும் விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் கோலி இத்தனை நாள் பயன்படுத்தி வந்த ஜீனியஸ் எம் ஆர் எஃப்க்கு பதில் எம் ஆர் எஃப் விசார்ட் என்ற விளம்பரம் பொருந்திய பேட்களை பயன்படுத்த உள்ளாராம்.