Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

Advertiesment
அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி
, புதன், 30 செப்டம்பர் 2020 (15:55 IST)
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
 
கிரக நிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  புதன்(வ) - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக  ஸ்தானத்தில்  குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
எல்லா உயிர்களுக்கும் அன்பு அளிக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். 
 
குடும்பத்தில் பேச்சில் நிதானம் தேவை. பங்காளி சம்மந்தமான வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். 
 
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 
 
பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.
 
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். 
 
அஸ்தம்:
இந்த மாதம்  நீங்கள் சோதனையான பலன்களையே சந்திப்பீர்கள். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினை களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் எதிலும் முழுப்பலனை அடையமுடியாது.
 
சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம்  எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவுகளை இழப்பார்கள். 
 
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்