Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

Advertiesment
அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்
, புதன், 30 செப்டம்பர் 2020 (15:43 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
மனதில் உள்ள ஆதங்கத்தை வெளியில் காட்டத் தெரியாத மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.
 
குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
 
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். 
 
மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும்.
 
அஸ்வினி:
இந்த மாதம்  பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது. 
 
பரணி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். 
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம்  . திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.
 
பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-09-2020)!