ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரக நிலை:
ராசியில் ராஹூ - சுகஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
துல்லியமாக அனைவரையும் கணக்கிடும் திறமை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த மாதம் இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
ரோகிணி:
இந்த மாதம் சுமாராகத்தான் இருக்கும். முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். வருமானம் போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16