Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 10/09/2020

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 10/09/2020
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் எச்சரிக்கை தேவை.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரத்து இருந்தாலும் இழுப்பறி ஏற்படும். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்க எதிலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடை ஏற்படும்.
 
3. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை  போன்றவை ஏற்படலாம்.
 
4. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு சண்டையில் முடியும். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்யக்கூடும்.
 
5. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலையும், திடீர் செலவுகளும் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது  நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 10/09/2020