Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக தெரியுமா?

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக தெரியுமா?
, வியாழன், 5 அக்டோபர் 2017 (13:00 IST)
ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக என்ற விவரம் தெரியவந்துள்ளது.



 
ட்விட்டரில் அதிமுகவையும், பாஜகவையும் விமர்சித்து வந்த கமல், தான் நேரடி அரசியலில் இறங்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், எந்த நேரத்திலும் அவர் அரசியலில் குதிக்கலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தனது ரசிகர்களை நேற்று சந்தித்துப் பேசினார் கமல். அடுத்த மாதம் வருகிற தனது பிறந்தநாளன்று தனிக்கட்சி தொடங்கப் போகிறார் கமல், அதற்காகத்தான் ரசிகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் எனத் தகவல் பரவியது. ஆனால், தன்னுடைய பிறந்த நாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தத்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய பிறந்த நாளில், வழக்கத்தைவிட நிறைய நலத்திட்ட உதவிகள் செய்ய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாராம் கமல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா