விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

BALA
வியாழன், 27 நவம்பர் 2025 (10:04 IST)
sengottaiyan

அதிமுகவில் 40 வருடங்களுக்கு மேல் பயணித்து செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைகிறார் என்பதுதான் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி அதற்காக கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

அதன்பின் பாஜகவும் தன்னை கைவிட்ட நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக முடிவெடுத்தார் செங்கோட்டையன். கடந்த சில நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜயின் வீட்டிற்கு சென்று இரண்டு மணி நேரம் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு வந்தார் செங்கோட்டையன். அவரோடு அவரின் ஆதரவாளர்களும் வந்தார்கள். அதன்பின் அவர் விஜயின் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு விஜய் அடையாள அட்டை கொடுப்பதோடு அவருக்கு இன்று புதிய பதிவியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments