Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு..!

எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில்,  திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு..!

Siva

, வெள்ளி, 3 ஜனவரி 2025 (08:23 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தேஜஸ் ரயில் டிசம்பர் 7 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடைபெறும் என்று வருவதை அடுத்து சில ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் முழு விவரம் இதோ:

1. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 4, 7, 9, 11ம் தேதிகளில், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும்.  மதுரை வழியாக செல்லாது.

2. நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி விரைவு ரயில், 9ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்

3. குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், 3, 6, 8, 10ம் தேதிகளில் புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்

4. நாகர்கோவில் - கோவை விரைவு ரயில், 4, 7, 9, 11ம் தேதிகளில், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்வதால், மதுரை வழியாக செல்லாது

5. எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், 7, 11ம் தேதிகளில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்

6. ஓக்ஹா - மதுரை இரவு 10:00 சிறப்பு ரயில், வரும் 6ம் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும்

7. ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி விரைவு ரயில், இன்றும், 6ம் தேதியும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்

8. மதுரை - எழும்பூர் மாலை 3:00 மணி தேஜஸ் ரயில், வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து இயக்கப்படும்

9. செங்கோட்டை - ஈரோடு அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 7ம் தேதி கரூரில் இருந்து இயக்கப்படும்



Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..!