அரை நிர்வாணமாக இளைஞர் விமான ரன்வேயில் ரகளை!

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (16:16 IST)
அமெரிக்காவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பாதுகாப்பை மீறி நுழைந்து அரை நிர்வாணமாக ரன்வேயில் ரகளை செய்து இளைஞரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர். 
 
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மிகவும் பிசியான விமான நிலையமாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 
ஆனால், இந்த பாதுகப்புகளையும் மீறி இளைஞர் ஒருவர் கம்பி வேலியை தாண்டி குதித்து ஓடுபாதைக்கு வந்துள்ளார். புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தை நெருங்கி, விமானத்தில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். 
 
அதோடு விமானத்தின் அவசர கால கதவை திறக்கவும் முயன்றுள்ளார். அரை நிர்வாண கோலத்துடன் வாலிபர் ரகளையில் ஈடுப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
பின்னர் விமான காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த இலைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரை விசாரித்த போது விமான நிலையத்தை ஒட்டி நடைபெறும் கட்டுமான பணி பகுதியில் இருந்து வேலியை தாண்டி குதித்து உள்ளே வந்தது தெரிந்தது. பின்னர் அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments