சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் தொடங்கியது!

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (16:05 IST)
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தின் டப்பிங் நேற்று தொடங்கியது.
 
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியுள்ள படம் ‘கனா’. பாடலாசிரியர், பாடகர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
 
திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிக்கெட்டராக விரும்பும் மகள் - அப்பாவுக்கு இடையிலான கதை தான் இந்தப் படம். அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்றது.
 
இந்நிலையில், நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. சத்யராஜ் பூஜையுடன் டப்பிங்கைத் தொடங்கினார். நேற்று சிவகார்த்திகேயன் அப்பாவின் நினைவு நாள். அந்த நாளில் டப்பிங்கைத் தொடங்கி அப்பாவுக்கு மரியாதை செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments