Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (13:02 IST)
மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், எட்டு நிமிடங்கள் கழித்து உயிர்த்தெழுந்து, அதன் பின் பேட்டி அளிக்கும்போது, "என் உடலில் இருந்து உயிர் பிரிந்ததை பார்த்தேன், எனது பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்," என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொலரோடா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது பிரயானா என்பவர், நரம்பியல் நோய் காரணமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக அறிவித்த நிலையில், அவருக்கு இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, திடீரென அவர் உயிர்த்தெழுந்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 
அப்போது அவர் பேட்டி அளித்தபோது கூறியது: "என் உடலை விட்டு நான் பிரிந்து சென்றதை என் கண்களால் பார்த்தேன். வலியில்லை, ஆழமான அமைதி மற்றும் தெளிவான உணர்வு ஏற்பட்டது. 
 
மனிதன் வாழ்வு எவ்வளவு குறுகியது என்பதை நான் உணர்ந்தேன். மரணம் என்பது ஒரு மாயை; ஆன்மாவுக்கு என்றும் அழிவில்லை. எப்போதும்  நம்முடைய ஆன்மா உயிருடன் தான் இருக்கிறது. மரணத்திற்கு பின்னர் ஒரு அமைதி, தெளிவு இருந்தது. அது ஒரு சக்தி வாய்ந்த அனுபவம்," என்று கூறியுள்ளார்.
 
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments