Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் தக்காளி எங்களுக்கு வேண்டாம்; பாகிஸ்தான் அதிரடி

Advertiesment
இந்தியாவின் தக்காளி எங்களுக்கு வேண்டாம்; பாகிஸ்தான் அதிரடி
, புதன், 27 செப்டம்பர் 2017 (14:48 IST)
பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும் இந்தியாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


 

 
பாகிஸ்தானில் ஏற்படும் தக்காளிப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து தக்காளியை பாகிஸ்தான் இறக்குமதி செய்து வந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாத காரணத்தினால் இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
 
பாகிஸ்தான் தக்காளி பற்றாக்குறை காரணமாக தற்போது தக்காளி 1 கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. கடும் தட்டுபாடு நிலவினாலும் இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய போவதில்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் அரசின் முடிவால் உள்ளூர் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என லாகூர் வணிக மற்றும் தொழில்துறைதலைவர் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் தக்காளி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது என்றும் தெரிவித்தார்.
 
தக்காளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது அந்நாட்டு சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியுடன் கை கோர்க்க உள்ள தினகரனும், சசிகலாவும்: தம்பிதுரை அதிர்ச்சி தகவல்!